தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ட்ரஸ்ட் சம்பந்தமான மோதல் வலுத்திருக்கிறது. விசு,பாடலாசிரியர் பிறைசூடன் ஒரு அணியாகவும் பாக்யராஜ் மற்றும் உறுப்பினர்கள் இன்னொரு அணியாகவும் ட்ரஸ்ட் பண விவகாரமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள் . ட்ரஸ்ட் விவகாரத்தில்தான் பெரிய பெரிய கட்சிகள் கூட பிளவு பட்டு சிதறி இருக்கின்றன.அதே நிலை இந்த சங்கத்துக்கும் வந்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது,
அமெரிக்காவில் இருக்கிற விசுவுக்கு பாக்யராஜ் பகிரங்கமாக ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
“சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் பிறைசூடனடா!” என கர்ணன் படப்பாடலை திருத்திக் குறிப்பிட்டிருக்கிறார் பாக்யராஜ். “பொய்களாலேயே புனையப்பட்ட ஒரு மகா பாக்யசாலி கவிஞர் பிறைசூடன் “என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார் என்றால் அவர்களது பிரச்னை எந்த அளவுக்கு கடுமை என்பது புரியும்!