ஆளாளுக்கு அரசியல் ஆசை பிடித்து அலைகிறார்கள், கோலிவுட்டில்! ஆனால் பலர் பம்மிக்கொண்டு இருக்கிறார்கள் . வெளிப்படையாகச் சொன்னால் வம்பை வெத்திலை பாக்கு வைத்து அழைத்தது போலாகிவிடும்! ஆனால் ‘அண்ணனுக்கு ஜே’ பட நாயகனாக நடித்திருக்கும் அட்டக்கத்தி தினேஷ்க்கு அரசியல் ஆசை.
படத்தின் பேனரைப் பார்த்தால் திமுக கொடி சாயலில் படம் இருக்கிறது. அதைப்பற்றி கேட்டதற்கு அது திமுககொடி இல்லை என்று சொல்லிவிட்டார் இயக்குநர் .ஆனால் அரசியலை கலாய்க்கும்படம்தான் அண்ணனுக்கு ஜே. நாலாண்டு கடந்து அரசியல் சூடு பிடித்துள்ள நிலையில் இந்தப்படத்தை வெளியிடுகிறார் தயாரிப்பாளர் வெற்றி மாறன்.
அட்டக்கத்தி தினேஷ் என சொல்கிறார்.
“எனக்கு அரசியல் ஆசை சின்ன வயசில் இருந்தே இருக்கு. ஆனால் அனுபவம் வேணுமே! தமிழ்நாட்டில் வழிகாட்ட சரியான தலைவர்கள் இல்ல.போராடினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள். நான் கமல்,ரஜினி ஆகியோரை ஆதரிக்கமாட்டேன். டி.டி.வி.தினகரனை ஆதரிப்பேன்.அவர் நன்றாக செயல்படுகிறார். மக்களில் ஒருவனாகத்தான் இதை சொல்கிறேன் ” என்கிறார்.
பிறகென்ன ஆளை தூக்கிட்டு போங்கப்பா! சினிமாவில் இருந்து ஒரு நடிகர் உங்க அணிக்கு வருவதே ஆச்சரியம்.!