ஒரு தடவை தேர்தலுக்காக மாவட்டம் தோறும் நிதி திரட்டியது தி.மு.கழகம். அப்போது அதிகமாக நிதி திரட்டியவர் கலைஞர். 11 லட்சம். இன்றைய மதிப்பில் அது கோடி! இதைப் பாராட்டிய பேரறிஞர் அண்ணா “என் தம்பிக்காக கடை கடையாக ஏறி இந்த மோதிரத்தை வாங்கி வந்திருக்கிறேன்” என சொல்லி பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கையில் அணிவித்தார் அந்த மோதிரத்தை கடைசிவரை கழட்டவே இல்லை. இன்னொரு மோதிரம் யாரோ அணிவித்த பவள மோதிரம். அதையும் அவர் கழட்டியதில்லை.அவருடன் இந்த மோதிரங்களும் பேழைக்குள் அடங்கி விட்டன.