கட்டுப்பெட்டியாக கட்டுக்குள் அடங்கிக் கிடந்த தமிழ்ச்சினிமா தற்போது விடுபட்டு சிறகடித்துப் பறப்பதைப் போல தெலுங்கு சினிமாவும் பறந்து கொண்டிருக்கிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படம் என்றால் கிஸ் இருக்கும் என்கிற நம்பிக்கையில் வாலிபர் வட்டம் தியேட்டரைச் சுற்றும்.
ஆந்திராவில் அட்வி சேஷ் நடிக்கும் படம் என்றால் உதடுகள் கவ்வும் காட்சிக்கு உத்திரவாதம் என்கிறார்கள்.
ஆனால் ஷிவானி நடிக்கும் படத்தில் இருக்குமா என்கிற சந்தேகம் அக்கட பூமியில்! “ஏனய்யா டவுட்?”
“அதாவதுங்க, அந்த பொண்ணு ராஜசேகர் ஜீவிதாவின் மகள்,புதுசா நடிக்க வந்திருக்கு! அது இஷ்டப்படுமா மறுக்குமா அப்பா அம்மா சம்மதம் கிடைக்குமான்னு பார்க்கனும்ல.?”என்கிறார்கள்.
காலத்துடன் ஒத்துப்போகவேண்டிய கட்டாயமா,இல்லையா என்பதை யார் தீர்மானிக்கப் போகிறார்கள்?