லாஸ்வேகாசிலிருந்து சென்னை திரும்பியதும் தளபதி விஜய் செய்த முதல் காரியம் விமான நிலையத்திலிருந்து மெரினாவுக்கு வந்ததுதான்.
காரிருள் அகலும் நேரம்,சூரியன் உதிக்கும் அதிகாலைப் பொழுது. கலைஞரின் சமாதியில் மலர் தூவி மரியாதை செய்தார்,சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.
திமுக.தலைவர் கலைஞர் மரணம் அடைந்தபோது அவர் அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் நகரத்தில் சர்க்கார் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார்.கலைஞருக்காக ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்தனர். இன்றுதான் சென்னை திரும்பினார்.
நேற்று சென்னை நாக் ஸ்டுடியோ மேலாளர் கல்யாணம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்,