தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறி, நடிகர்கள்,இயக்குனர்கள் என பலரும் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டனர் என்று நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியதோடு, அவர்களில் சிலரின் பெயர் பட்டியலையும் வெளியிட்டு பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார். இந்நிலையில், இன்று மாலை சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில்,தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்லும் படம் ஒன்றில் நடிப்பதாக அறிவித்துள்ளார்.இப்படத்திற்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.அலாவுதீன் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். 70 சதவிகிதம் ரகசிய கேமரா மூலம் படமாக்க உள்ளனராம் . ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெற இருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார்.