ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ,சசிகலாவைப் பற்றிய ஆஸ்பத்திரி செய்தி என்றாலே பக் பக் என்று நமக்குத்தான் நெஞ்சு அதிகமாக அடித்துக் கொள்கிறது.!
இது நாள் வரை சசிகலாவைப் பற்றிய செய்திகள் வராமலேயே இருந்தன .இன்று சுயநினைவை இழந்தார், பிறகு கண் விழித்தார் என்பது போன்ற செய்திகள். எல்லாமே பரபரப்புக்கான செய்திகளாவே வருகின்றன.
பொதுவாக காலை உணவைத் தவிர்த்து வந்திருக்கிறார். சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளையும் தவிர்த்திருக்கிறார் என்கிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை
.மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் கடுமையான விளைவுகள் வரும் என்கிறார்கள் டாக்டர்கள். மயங்கி விழுந்ததும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.சற்று நேரத்தில் சுய நினைவை இழந்ததாக சொல்கிறார்கள். அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க உறவினர்கள் முயற்சிப்பதாகவும் செய்தி இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இவருக்கும் ஜெயலலிதாவுக்கும்தான் நான்காண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது,