வடசென்னைன்னு நிறைய வடை சுட்டாச்சு. மைலாப்பூர் , திருவல்லிக்கேணிக்கு , இந்த சப்ஜெக்ட்டை தூக்கிட்டு போவதை விட ஸ்டிரைட்டா கொச்சிக்கு ஷிப்ட் பண்ணினால் என்ன? அத்தையை பார்த்த மாதிரியும் ஆச்சு. அத்தை மகளை மேய்ச்ச மாதிரியும் ஆச்சு! டைரக்டர் கிரண்சந்த் ஐடியா போட்டு கதையை கடவுளின் தேசத்துக்குத் தூக்கி இருக்கிறார். கொச்சியில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிற இடமாம்.
அன்வரை ( விஷ்ணு.) தேன்மொழி (சம்யுக்தா.) காதலிக்கிறார். முருகேசை (கிருஷ்ணா.)வித்யா பிரதீப் நேசிக்கிறார். தங்கை தேன்மொழி காதலுக்கு அண்ணன் கிருஷ்ணா சப்போர்ட். ஜோடிகளின் காதல் எபெக்ட் கப் லிங்க் போட்ட மாதிரி ஸ்டிராங். ஆனால் சஸ்பென்சை அங்கு வைக்காமல் சத்தியவான்கள் மீது வைக்கிறார்கள்.அங்குதான் மழை வெள்ளம் பாய்ந்து கரையை உடைத்து கதைக்கு சேதம் ஆகிறது.
ஹீரோவுக்குக்கு யானை பலம்,குதிரை பலம் என காட்டுவதை விடுத்து கிருஷ்ணாவை செம அடி வாங்க வைத்திருக்கிறார்கள். அதற்கு மனோதத்துவ அடிப்படையில் காரணம் வேறு! மேட்ச் ஆகல சேட்டா! எம்.எஸ்.பாஸ்கரை தவிர்த்து மற்ற எல்லோரும் நம்ம ஊர் தமிழ்தான். கல்லீரல் வீங்கும் வரை குடிகாரனாகவே காட்ட வேண்டும் என்பது பாஸ்கரின் சாபமோ என்னவோ! பாவம் சாரே !
பாய்ந்து கற்பழிக்கும் வில்லனாக சித்தீக். ஜெயப்பிரகாஷ் மேல் ஒட்டவே மாட்டேங்கிது.சம்யுக்தாவை சீரழிக்கும் காட்சியில் நிறைய டேக் வாங்கினாரா இல்லையா? ஸ்டிராங் மேன் சார். அபார்ஷன் வரை போயிருச்சே!
அதென்னமோ சம்யுக்தாவைப் போல வித்யா எடுப்பாக இல்லை. பிளாக் பாண்டி,சென்ட்ராயன் இவர்கள் எதற்காக வந்து போகிறார்கள்.,?வேஸ்ட் லக்கேஜ்.!