மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’.
அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், டயானா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள்!
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றனர்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
தொழிலதிபர்,ரியல் எஸ்டேட்அதிபர்,கல்வித்தந்தை மணல் மாபியா வடிவில் கிரிமினல்கள் இருப்பதாக கூறப்படும் பின்னணி வசனத்துடன் தொடங்கும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி,தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது.. அரவிந்த்சாமி அருண்விஜய் ,சிம்பு ஆகியோர் இதில் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர். அருண் விஜய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்பு ஜோடியாக டயானாவும் நடித்துள்ளனர். போலிஸ் அதிகாரியான விஜய்சேதுபதிக்கு ஜோடி என எவரும் இல்லை என்கிறார்கள். அத்துடன், அரவிந்த் சாமி ஜோடியாக ஜோதிகா மற்றும் அதிதி ராவ் இருவரும் நடித்துள்ளதாக புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது படத்தரப்பு .