அரசியல் பயணம் ஒரு பக்கம் என்றாலும் திரை உலகப் பயணத்தை சலிப்பில்லாமல் கொண்டு போகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.டிரிடேன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ராஜ்கமல் இன்டர்நேஷனல் இரண்டும் சேர்ந்து கமலின் 45 வது தயாரிப்பின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. சீயான் விக்ரம், அக்சரா ஹாசன் ,அபி ஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். ராஜேஷ் எம்.செல்வா இயக்கம்.ஜிப்ரான் இசை என முதல் கட்ட வேலைகள் ஆரம்பமாகி இருக்கிறது.