இன்னும் பெயரிடப்படவில்லை !இன்று மாலையில் பெயரும் ,ரஜினியின் வேஷமும் வெளிவருகிறது. பர்ஸ்ட் லுக்.
iஆனால் நாளுக்கு நாள் படத்தில் புதியவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் -ரஜினி இணைந்திருக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா ஆகிய பிரபலங்கள் கலந்து இருக்க தற்போது அடிஷனல் கலவையாக ஜோக்கர் படப் புகழ் குரு சோமசுந்தரம் சேர்ந்திருக்கிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், ஓவர் ஆக்டிங் பண்ண மாட்டார். கொடுத்த கேரக்டருக்குள் அடங்கியே வாசிப்பார். இவருக்கு எந்த மாதிரியான கேரக்டர் கொடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.
இன்னும் எத்தனை திறமைசாலிகள் வந்தாலும் அவர்களை ரஜினியின் பிம்பம் அடிபடாதபடிதான் இயக்குநர் சுப்புராஜ் பார்த்துக் கொள்ளப்போகிறார்.