“நீ யாரா வேணும்னாலும் இரு….எவனா வேணும்னாலும் இரு.! ஆனா தள்ளியே இரு!” பஞ்ச் அடிக்கிறார் சீமராஜா.
யாரையோ மனசுல வச்சிக்கிட்டு வீசுன கத்தி மாதிரி தெரியிது.
சிங்கம்பட்டி ராஜாவுக்கு செமையான ஆளு சிவகார்த்திகேயன். காமடியும் காதல் டூயட்டும் என தனித்த ஏரியாவில் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தவரை சீமராஜா, கடம்பவேல் ராஜா என இரு வேடங்களில் இரட்டைக் குதிரை சாரட்டில் பயணிக்க வைத்திருக்கிறார்கள். . அவரது மாஸ் க்கு பங்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
ஒரே சமஸ்தானத்தில் காதலி இருந்தால் சுவை இருக்காதே! அதனால் எதிரி ஏரியாவான புளியம் பட்டியில் சீமைராணி சிலம்ப சுந்தரி சமந்தா இருக்கிறார். காத்தாடி கண்ணனின் மகள்.
மழை ,தண்ணி இல்லாம விவசாயம் பண்ண முடியாம கிடக்கும் சிங்கம்பட்டி வயல்களில் காத்தாடி ஆலை போட கண்ணன் வீசுகிறார் வலை! மக்களை எப்படி வலை அறுத்துக் காப்பாத்துகிறார் சீமராஜா என்பது கதை.
பார்க்கிறவர்களின் மனதில் வசதியாக அமர்ந்து கொள்கிறார் சிவகார்த்திகேயன். கதைக்கு இலவச இணைப்பு மாதிரி கடம்பவேல் ராஜா பிளாஷ்பேக். பணத்தைத் தண்ணீராக இறைத்து இருக்கிறார்கள் என்பது காட்சிகளில் தெரிகிறது. சிவகார்த்திகேயனின் நடிப்பிலும் மாறுதல் இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் சிறிது நேரமே என்றாலும் கச்சிதம்.
ராஜ வம்சத்தில் மரணம் எப்படி எதிர் கொள்ளப் படுகிறது என்பதை காட்டி இருக்கிறார்கள். சீமராஜாவின் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.
சூரி சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் என்பதைத் தவிர கதைக்கு அது எந்த வகையில் துணை செய்கிறது? யோகிபாபு ஒரே காட்சியில் !
சமந்தாவின் நடிப்பும் சிலம்ப சண்டையும் செம. நெடிய இடைவெளிக்குப் பின்னர் சிம்ரனை கோதாவில் இறக்கி விட்டிருக்கிறார்கள், புடவையை தூக்கிக்கட்டி சண்டியர்த்தனம் பண்ணுவது சத்தம் போட்டு பயம் காட்டுவது….கதைக்குத் தேவை.? !
சிம்ரன் பிரபலம் என்பதால் அந்த வில்லி கேரக்டர் கவனிக்கப்படுகிறது.
பள்ளிக்கூட விருது விழா மல்யுத்தப்போட்டி இரண்டும் கவனிக்க வைக்கிறது. பால சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவை குறிப்பிடவேண்டும். இரண்டு பாடல்கள் கேட்கலாம்.
நவராத்திரி விழாவில் ஒவ்வொரு படிகளிலும் கலர் கலராக பொம்மைகள் வைத்திருப்பார்களே..பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சீமராஜாவும் அதுபோல அழகு,