என்னிக்கி மார்க்கெட் படுத்துக்குதோ அன்னிக்கே நடிகையின் அடுத்த ஜாய்ஸ் கல்யாணம்தான்! அதுவரை காதலனுடன் டேட்டிங், மீட்டிங் என்று குறையில்லாமல் போகும்.இழந்த மார்க்கெட் எழுந்து நிற்க வாய்ப்பில்லை என்றதும் காதல் கதைகளை பிரஸ்மீட்டில் கேட்கலாம். அது ஒரு விளம்பரம்தானே.!
ஆனால் டாப்சியின் கதை வேற.
அவர் டேனிஷ் பேட்மிண்டன் பிளேயர் மத்தியாஸ் என்பவருடன் காதலில் இருக்கிறார்.
“எனக்கு எப்ப குழந்தை பெத்துக்கவேணும்னு தோணுதோ அப்பவே கல்யாணம் பண்ணிக்குவேன். கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துக்க முடியாதே!”என்கிறார்.
இது காமடியா,அல்லது சீரியஸா?