கக்கத்தில் அரிக்கிதுன்னு சொல்லி கொள்ளிக் கட்டையை எடுத்து எவனாவது சொறிஞ்சிக்குவானா?
பிரபல ஒளிப்பதிவாளரும் ‘ஏஸ்’ டைரக்டருமான சந்தோஷ் சிவன் சொறிஞ்சிக்கிட்டாரே! அவர் யாரை நினைச்சு அந்தப் படங்களைப் போட்டாரோ தெரியாது, பொதுவான குற்றச்சாட்டாகிடுச்சி.
“நடிகைகளுக்கு காசு கொடுக்கிறபோது புரொட்யூசர் முகம் சந்தோஷமா இருக்கும். அதே நேரத்தில் டெக்னிஷியன்களுக்கு கொடுக்கும்போது மட்டும் கடுப்பாகிடும்”னு ஒரு கருத்தை படம் போட்டு பதிவு செய்திருந்தார்.
ஜெ.எஸ்.கே.பிலிம்ஸ் ஜெ.சதீஷ்குமார் குமுறிட்டார்.
“சந்தோஷ் சிவன்…கலையை நேசிக்கத் தெரியாத உன் திமிர் பிடித்த விமர்சனத்துக்கு கண்டனம். உனக்கு வாய்ப்புக் கொடுத்த விஷால், லிங்குசாமியையா சொல்கிறாய். மன்னிப்புக் கேள். இல்லை என்றால் கலைத் தாய் உணரச்செய்வாள்” எனப் பதிவு செய்ய மற்றவர்களுக்கு வழி காட்டியது மாதிரி ஆகி விட்டது.
ஆள் ஆளுக்கு கட்டி ஏறி காதை அறுக்காத கதைதான்! பார்த்தார் சந்தோஷ் சிவன். நமக்கு சந்தோஷமே இல்லாமப் போகும் போலிருக்கே என நினைத்து “பல நல்லெண்ண தயாரிப்பாளர்கள் வருத்தம் தெரிவித்ததால் நீக்குகிறேன்” என டிவீட் பண்ணிவிட்டார். இது எப்படி இருக்கு!