சேதுவும் பிதாமகனும் சீயான் விக்ரமுக்கு விலாசம் கொடுத்த படங்களாகும். இவை இரண்டும் பாலா இயக்கியதாகும்..தனது மகன் துருவ் திரைப்பட பிரவேசமும் பாலாவின் படமாக இருக்கவேண்டும் என்பது சீயானின் ஆசை! அதனால் பாலாவின் கையில் ஒப்படைத்து இருக்கிறார்.
ஆந்திராவில் அதிரடியாக ஓடி வசூலை குவித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தைத் தமிழுக்கு ஏற்ப மாற்றி இருக்கிறார் பாலா.படம் பலாப்பலமாக இருக்கிறது என்கிறார்கள்.. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை துருவ் பிறந்த நாளான செப் .23 ம் நாள் வேலூர் வி.ஐ.டி.கல்லூரியில் நடத்தி பரிசு தருகிறார் பாலா.
ரைசா,ஈஸ்வரிராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.ரதன் இசை அமைத்திருக்கிறார்.