போகிற போக்கில் போட்டுவிட்டுப் போவது மாதிரியான செய்தி இல்லை . உட்கார்ந்து யோசித்து சொன்னது மாதிரிதான் இயக்குநர் அமீரின் பேச்சு இருக்கிறது. “விலங்குடன் மனிதன் உறவு கொள்ளலாமா?” கேள்வியே மண்டையில் சம்மட்டியால் அடிப்பது மாதிரியாக இல்லையா?
வெளிநாட்டில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் பசு மாட்டுடன் செக்ஸ் வைத்திருக்கிறான். அதை கண்டு பிடித்த சிலர் அவனை பொறி வைத்து பிடித்து விட்டார்கள். இது குற்றமா இல்லையா, அல்லது மன்னித்து விடுவார்களா, என்பது தெரியவில்லை. மாடு மனிதன் மீது புகார் கொடுக்கவில்லையே?
இதைதான் அமீர் சொல்கிறாரோ என்னவோ? அவர் சொல்கிறார்.
“மனிதனும் விலங்கும் உறவு வைத்தால் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை? அதுவும் ஒரு உணர்வுதானே! (அப்படிப் போடு!) விலங்கின் சம்மதத்துடன் (? )அது நடக்கிறது.இதில் வற்புறுத்தல் இல்லையே, அதை ஏன் எதிர்க்கிறார்கள்?” என்று பலே கேள்வியை கேட்டிருக்கிறார்.