கார்த்திக் சுப்பராஜின் பேட்ட படத்தில் தலைவர் ரஜினிகாந்த் மிசா கைதியாக வருகிறார் என்கிறார்கள்.
இந்திரா காந்தி காலத்தில்தான் மிசா சட்டம் கொண்டுவரப்பட்டது. மு.க. ஸ்டாலின் உள்பட பலர் கைதாகி இருந்தார்கள்.1975-ல் இந்த சட்டத்தின்படி இந்தியா முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள் கைதாகி இருந்தார்கள். ‘பேட்ட’ படத்திலும் மிசா வை பற்றி கார்த்திக் சுப்பராஜ் சீன் வைத்திருப்பார் என சொல்லப்படுகிறது. தலைவர் ரஜினியின் கையில் மிசா 109 என பச்சை குத்தப்பட்டிருந்ததை யூனிட்டில் உள்ள சிலர் பார்த்திருக்கிறார்கள்.