‘சர்வம் தல மயம்’ படத்தில் “பீட்டர், பீட்டு எது” என்கிற பாடல் செம மாஸ் காட்டும் என்கிறார்கள். “நெருப்புடா” பாடல் எழுதி கலக்கிய இயக்குநர் அருண்ராஜா காமராஜ்தான் இந்த பாடலையும் எழுதி இருக்கிறார். சர்வம் தல மயம் படத்தின் இயக்குநர் பிரபல ஒளிப்பதிவாளரான ராஜீவ்மேனன். இவர் மின்சாரக் கனவு, கண்டு கொண்டேன்,கண்டு கொண்டேன் ஆகிய படங்களை இயக்கியவர். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சர்வம் தல மயம் படத்துக்கு இசை ஏஆர்ரகுமான்.
‘இந்த படம் பிளாக் பஸ்டர்”என்கிறார் இயக்குநர் அதிக் ரவிச்சந்திரன்.