சீமராஜா சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து வர இருப்பது ஒரு குறும் படம். மோதி விளையாடு பாப்பா என பெயரிடப்பட்ட இந்த படத்தில் முக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்தான்.
இவருடன் 40 சிறுமிகள் நடிக்கிறார்கள் .திரு தான் இயக்குகிறார். “விழிப்புணர்வை ஏற்படுத்துகிற படம் என்பதாலும் நானும் ஒரு பெண் குழந்தைக்கு அப்பா என்பதாலும் இந்த படத்துக்காக சம்பளம் வாங்கவில்லை” என்கிறார் சிவகார்த்திகேயன்.
“எடிட்டிங்,பின்னணி இசை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.விரைவில் இந்த குறும் படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகுமென்கிறார் இயக்குநர் திரு.