ஜெயலலிதாவாக நடிக்கவிருப்பவர் நித்யா மேனன். இவர் சற்று எடை கூடியவர்தான். கொஞ்சம் ‘ஹல்க்’ மாதிரி.!
எடை கூடியவர் என்பதினால்தான் இவரை செலக்ட் பண்ணினார்களோ என்னவோ..! தற்போது கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்.
“என்னம்மா இப்படி பெருத்திட்டியே ,உடம்ப கவனி” என்பவர்களின் அட்வைஸ் அதிகமாகி விட்டது. எத்தனை நாளைக்குத்தான் இந்த இம்சை தாங்குவது?
பொங்கிவிட்டார்.!
“நானே கவலைப்படல.உங்களுக்கேன் வலி? வெயிட்டைக் குறைக்கிறது எனக்கு பெரிய வேலை இல்லை.ஒரே மாதம் போதும்!
ஆனா யாருக்காக எடையை இழக்கணும்? ஹிரோயின் எல்லாம் ஒல்லியாத்தான் இருக்கணும்னு யாரும் சொல்லல. எடையை குறை வாய்ப்பு தாறேன்னு சொன்னா அந்த வாய்ப்புத் தேவையே இல்ல.” என்றிருக்கிறார் நித்யா மேனன்.
மேடம் ..ஜெ.யும் இப்படித்தான். கோபப்படுவார். டேபிள் வெயிட்டெல்லாம் தூக்கி வீசுவார். உங்களுக்கு சரியான வேடம்தான்.!