24ஏ.எம்.ஸ்டுடியோஸ் படநிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயனின் மேனேஜர் ராஜா தயாரித்து வரும் பெயைன்னும் பெயரிடப்படாத படத்தில்,சிவ கார்த்திகேயன் வித்தியாசமான வேடத்தை ஏற்கிறார்.ஆம்,அவ்வை சண்முகி போல நடுத்தர வயது பெண் வேடத்தை ஏற்றுள்ளார். இதற்காகவே ஹாலி வுட்டிலிருந்து ஐ படத்தின் மேக்கப் டீம், ‘வீட்டா’ வரவழைக்கப்பட்டுள்ளது. எனவே அச்சு அசலாக சிவகார்த்திகேயனை பெண்ணாகவே ரசிகர்கள் ரசிக்கலாம். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளது. தாமதத்திற்கு காரணம், சமந்தாவின் கால்சீட் பெறுவதில் தான் என்கிறார்கள். சமந்தா தற்போது,பத்துஎன்னறதுக்குள்ள,சூர்யாவுடன் 24,விஜயுடன் புதியபடம்,வேல்ராஜ் இயக்கும் புதிய படம் என் படு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் என் கால்சீட் வேணும்னா கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வேணும் என சமந்தா கூறியதால் சிவ கார்த்திகேயன் படக்குழுவினர் காத்திருக்கும்படியான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது./