நிக்கி கல்ராணியின் இரத்தத்தின் இரத்தம்தான் இந்த சஞ்சனா கல்ராணி. கன்னடத்தில்தான் ஜீவிதம். அப்பப்ப தெலுங்கு ,மலையாளம் என போய் வருகிறவர். இவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் தங்கைக்கே தானம் எடுக்கவேண்டிய நிலை அக்காவுக்கு எப்படி விருந்து கிடைக்கும்.?
போட்டார் பாருங்கள் ஒரு போடு! மொத்த கோலிவுட்டும் இவரைத்தான் பார்க்கிறது.
“விஜய் சார் பிரமாதமான நடிகர். அவருடன் ஒரு படம் நடித்தால் போதும்.அதற்குப் பிறகு கோபுரத்தில் ஏறி கிழே விழுந்து சாவதற்கும் தயார்” என்பதாக சொல்லியிருக்கிறார்.
இப்படி சொன்னால் யார் வாய்ப்பு தருவார்?
பழியும் பாவமும் தன்னை வந்து சேரும் என்று ஊட்டி விட மாட்டார்களா?