அந்த காலத்தில் இருந்தே சர்ச்சை ராணியாக இருப்பவர் கங்கனா ரனாவத். டாப் நடிகர்களிடமே சரவரிசை காட்டியவர். பெண்ணுரிமை அதிகம் பேசுகிறவர். இவரிடம் பேசுவதை விட பேசாமல் இருப்பதே நல்லது என்று பாலிவுட்டில் பதுங்கி விடுவார்கள்.
‘மணி கர்ணிகா’ என ஒரு படம். கிரிஷ் என்பவர் இயக்கி வந்தார். என்ன பிரச்னையோ!
மெகபோன் கங்கனா கையில்.டைரக்டர் ஆகி விட்டார்.
முக்கிய வேடத்தில் நடித்த சோனு சூத் பாதியிலேயே குட்பை சொல்லி விட்டார்.
கங்கனாவுக்கு காரணம் சொல்லவா தெரியாது?
“பெண் இயக்குனருக்கு கீழ் பணியாற்ற விருப்பமில்லாமல் அவர் நடிக்க மறுக்கிறார்” என கிளப்பி விட்டார்.
ஆனால் தற்போது இதுவல்ல பிரச்னை,வேற!.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் கங்கானாவின் மேக்கப் மேன் பிரெண்டன் அலீஸ்தர்டி. ஜி. என்பவரை அள்ளிக்கொண்டு போய் விட்டார்கள். காரணம் என்னவாம்?
அசிங்கம் சார்!
தென்னாப்ரிக்காவை சேர்ந்த 42 வயதுபிரெண்டன்
அலீஸ்தர் 16 வயது பையனை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்குப் பதிவாகி இருக்கிறது.
இப்படிப்பட்ட ஆளா கங்கனாவின் ஆள்? படத்தில் மூஞ்சியே சரியில்லையே!