ஆந்திராவின் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து கனவுக் கண்ணனாக இருப்பவர் விஜய்தேவரகொண்டா. நோட்டாவில் ரவுடி சி.எம்.மாக கலக்கி வருகிற விஜய் தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது ஞானவேல்ராஜாவுடன் இணைந்து பட நிறுவனம் தொடங்கி இருக்கிறார். இந்த படத்தின் ஹீரோ இயக்குநர் தருண் பாஸ்கர். விஜய்யின் பெல்லி சூப்புலு வெற்றி படத்தின் இயக்குநர். தமிழ்-தெலுங்கு இரு மொழிகளில் தயாராகப் போகிறது.