சின்ன கிராமம். சதுர்வர்ணம் ஆதிக்கம் செலுத்துகிற ஊர். சட்டமும் செல்லாது. சமதர்மமும் வாழாது என்கிற ‘நல்லவர்கள் ‘ வாழ்கிற இடத்தில் தாழ்த்தப் பட்ட குடும்பத்தில் எழவு விழுகிறது. ஐஸ் பொட்டிக்குள் அடங்கிக்கிடக்கிற ஜீவனில்லா சடலம். இதை அடக்கம் செய்ய தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படியெல்லாம் போராடுகிறார்கள் என்பதை நேரடிக்காட்சியாக ஒளிபரப்புவதைப் போல இருக்கிறது மனுஷங்கடா படம்.ஒரு உண்மை நிகழ்வை படமாக்கி இருக்கிறார்கள்.
ஹைகோர்ட் தீர்ப்பு சொல்லிட்டா என்னடா ,நாங்க உயர்சாதி மக்களுக்காக வாழ்கிற அரசு அதிகாரிகள் .இங்க எங்க சட்டம்தான் எடுபடும் என்கிற உண்மையை இயக்குநர் அம்ஷன்குமார் அடித்துச்சொல்லி இருக்கிறார். குச்சியால் அடித்தவர் திருக்கைவாலால் அடித்திருக்கலாம்.
ராஜீவ் ஆனந்த் சசிகுமார் மணிமேகலை இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். இன்குலாப் எழுதிய மனுசங்கடா பாடலை சென்னைக்கோட்டையில் தினமும் ஒலிபரப்பலாம்.
விருதுகள் கொடுக்கலாம்.