என்ன வகையான மனநிலை என்பது தெரியவில்லை.
நடிகர் திலீப் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படவில்லை.
தொடர்புடைய நடிகை பாவனாவுக்கு திருமணம் நடந்திருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட நடிகர் திலீப்புக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
குழந்தை பிறந்ததற்காக திலீப்-காவ்யா மாதவனை ஒரு மலையாளப் பெண் பத்திரிகையாளர் ஸ்ரீ தேவி ஸ்ரீதர் பிள்ளை அவரது டிவிட்டரில் வாழ்த்தியிருந்தார். இந்த ஸ்ரீ தேவி நடிகை நயன்தாராவின் நெருங்கிய நண்பி. சென்னையில் நடக்கும் முக்கியமான பார்ட்டிகளில் இவரைப் பார்க்கலாம். இவரது டிவிட்டருக்கு லட்சுமி மஞ்சு, ராய் லட்சுமி,டாப்சி.ஸ்ரேயா ,ரகுல் பிரீத் ஆகிய நடிகைகள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
“எப்படி வாழ்த்துச் சொன்னே?”
அட, பாவமே!
“கிட்டத்தட்ட ரேப் என்கிற நிலைக்கு கொண்டு போன அந்த நடிகருக்கு எதிராக மலையாளப் பெண்கள் இருக்கிறார்கள் .அந்த நடிகருக்கு வாழ்த்து சொல்லலாமா ,வெட்கக்கேடு” என லட்சுமி மஞ்சு திட்டிய மாதிரியே மற்ற நடிகைகளும் ஸ்ரீதேவி ஸ்ரீதர் பிள்ளையை வறுத்து எடுத்திருக்கிறார்கள். வாழ்த்துவது பாவப்பட்ட செயலா?