இப்படி ஒரு பெயரா ஏஆர் .முருகதாஸ்க்கு??

ஒருவேளை நான்கு சுவற்றுக்குள்சர்கார் படத்தின் முடிவுகள் முடிக்கப் பட்டிருந்தால் முருகதாஸ் மீதான  பழிச்சொற்கள்,படுத்துக் கிடந்திருக்கலாம்.படம் எடுத்து ஆடியிருக்காது. ‘சர்கார்’ கதை என்னுடையதுதான் ,அந்த விவகாரத்தை நீதி மன்றத்தில் சந்திக்கிறேன்’ என வீர வசனம் பேசியது வினையாகிவிட்டதோ, என்னவோ,வாட்ஸ் அப்களில் விளையாடுகிறார்கள் மக்கள்.!

முருகதாஸ் என்றாலே  இப்படிப்பட்டவர்தான் என்கிற எண்ணத்தை வாட்ஸ்அப்பின்  பதிவுகள் எதிர்வரும் காலங்களில் மிரட்டக்கூடும்?

இதோ  வாட்ஸ் அப்பில் வந்தவையின் சுருக்கம்.

1) தீனா ,இந்த கதைஆர். நித்தியகுமார் என்ற இயக்குநரின் கதை..

( 2 ) ரமணா ,

இந்த கதை நந்தகுமார் என்ற இயக்குநரின் கதை.. இவர் மறைந்த இயக்குநர் ராஜசேகர்,மற்றும் P. வாசு அவர்களிடம் இனை இயக்குநராகவும் பிறகு விஜயகாந்த் நடித்த தென்னவன் ‘திரைப்படத்தை இயக்கியவர்… இவர் KT. குஞ்சுமோன் ( திரைப்பட தயாரிப்பாளர்) இவரின் மகனை வைத்து கோட்டீஸ்வரன் என்ற படத்தை இயக்கும் போது..AR. முருகதாஸ்…. நந்தகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்,

( 3 ) கஜினி

இந்த படத்தின் கதை … மெமொன்டோ என்ற ஒரு ஆங்கில படத்தில்லிருந்து திருடப்பட்டது.

( 4 ) துப்பாக்கி

இந்த கதை வாசு என்ற உதவி இயக்குநரிடம்,பாதி கதை பிரேம்குமார் என்ற உதவி இயக்குநருடையது.

( 5 ) கத்தி

இந்த கதை… கோபி நயினார் என்ற இயக்குநரின் கதை. இவர் நயன்தாரா நடித்த ‘ அறம் ‘ படத்தை இயக்கியவர்..

(6) ஸ்பைடர் மேன்

இந்த கதை இவரிடம் தெலுங்கு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாம்சன் சைத்தானியா என்ற உதவி இயக்குநருடையது

சர்கார் … வருண் ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து திருடப்பட்டது… இவர் SA. சந்திரசேகர்.. மற்றும் பல இயக்குநர்களிம்…இனை இயக்குநராக பணியாற்றினார்….

இப்படியாக பட்டியல் போட்டிருக்கிறார்கள்..