விஷ்ணு விஷால் மனைவியைப் பிரிந்தார்.

‘கற்பனைக்கு மேனி தந்து காற்சலங்கை போட்டுவிட்டேன்.கால் சலங்கை போன  இடம் கடவுளுக்கும் தெரியவில்லை’ என்பதைப் போல விஷ்ணு விஷால் -ரஜினி  காதல் எங்கே தொலைந்ததோ தெரியவில்லை. 

நெருங்கிய நண்பர் ரஜினியின் பெயரை  மகளுக்கு வைத்திருக்கிறார் நடிகர் நட்ராஜ்.

காவல் துறை அதிகாரியின் மகன்தான் விஷ்ணு விஷால்,ராட்சசன் நடிகர்.

விஷ்ணுவும் ரஜினியும் காதலித்து மணந்து கொண்டவர்கள் .இவர்களுக்கு ஆர்யன் என ஒரு மகன் இருக்கிறான். இருவரும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து முறைப்படி விவாகரத்து வாங்கி இருக்கிறார்கள். ‘மகனை சேர்ந்து வளர்ப்பதில் முழுக்கவனம் செலுத்துவோம். நாங்கள் நல்ல நண்பர்களாக இருப்போம்” என விஷ்ணு கூறி இருக்கிறார்.