பொண்டாட்டிக்கு உள்பாவாடை முதற்கொண்டு துவைத்துக் கொடுக்கிறது கணவனது கடமைதாங்க.
ஆண்களின் ஜட்டி பனியன் துவைத்துக் கொடுக்கிறது மனைவியின் கடமைன்னு சொல்றபோது சேலையயும் துவைச்சுக் கொடுக்கலாம்.
ரொம்பப்பேரு இதைத்தான் செய்றாங்க.ஆனா வெளிப்படையா காட்டிக்கிறதில்ல,
கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தந்த கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனிக்கு அவரின் மனைவி சாக்ஷி சிங் போட்ட உத்திரவு இது.!
“ஷூ வாங்கித் தந்தீங்கல்ல,எனக்கு பக்கில் போட வரல.அந்த பக்கிலை போட்டு விடுங்க”என்று சொல்ல தோனியும் மனம் நோகாமல் போட்டு விட்ட படத்தைத்தான் பார்க்கிறீங்க.
கிரிக்கெட்டில் சிக்சர் தூக்கினாலும் மனைவியின் ஷூவையும் தூக்க வேண்டியதிருக்கு!