.
ரா குல சாங்கிருத்யாயன்.
இவரது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலைப் படித்தவர்களுக்கு இவரது படைப்பின் தன்மை புரியும்! உண்மைகளையும் கதையாக சொல்வதில் மென்மையும் மேன்மையும் மேலோங்கி இருக்கும்.!
அண்மையில் அவரது ‘ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்’ என்கிற படைப்பை படிக்கநேர்ந்தது. ர.சவுரிராஜன் என்பவரது மொழி பெயர்ப்பு.!
அதில் ஒரு சிறு பகுதி. குறும் பகுதி என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு சிறிய பகுதி.!
“சகோதரச் சண்டைகளுக்கும் கொடிய துரோகங்களுக்கும் பிரபலமானதுதான் ராஜஸ்தான்!
ஒரு சமயம் ஜெய்பூர் மன்னரும், ஜோத்பூர் மன்னரும் திருத்தல யாத்திரை சென்றபோது ஹரித்வார் சேர்ந்தார்கள். இருவரும் கங்கையில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மேல் ஒருவர் தண்ணீரை வாரி இறைப்பது முக்கிய விளையாட்டாக இருந்தது.
இந்த சமயத்தில் ஒரு அரசர் பக்கத்திலிருந்த சாரண் கவி ( துதி பாடும் புலவன்.) சூர்யமல் என்பவனிடம் ” எங்கள் புகழை மேம்படுத்தும் வகையில் ஒரு கவிதை பாடு. பார்க்கலாம்’ என்றார்.
கவி இருவரிடமும் முன்னதாகவே வாக்குறுதி வாங்கிக்கொண்டு மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு ஒரு கவிதை பாடினான்.
அது இதுதான்!
“ஜெய்பூர் அரசர் கம்தாஜ் அவர்களும் ஜோத்பூர் அரசர் முரதர் அவர்களும் இப்போது நீரை வாரியடித்து விளையாடுகிறார்கள். இருவரும் தமது தந்தையரை கொன்று விட்டு ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியவர்கள் .அதனால் சம அந்தஸ்து உள்ளவர்கள்.”
இந்த கவிதையை படித்தபின்னர் அந்த கவிஞர்களின் கதை என்ன ஆனதோ! தெரியாது!
ஆனால் “ஜனக பக்ஷா ராஜகுமாரா” என்றொரு சம்ஸ்கிருத பழமொழி அதற்கு முந்தைய காலத்தில் இருந்தே இருக்கிறது. அதாவது ராஜபுத்திரர்கள் தந்தையை கொள்பவர்கள் என அர்த்தமாம்.