‘பொன்விலங்கு’, ‘மறுமலர்ச்சி,’ ‘சிந்துநதிப் பூ’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ரஞ்சித். இவர் சமீபத்தில் ,பா.ம.கநிறுவனர் ராமதாசை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார். அதையடுத்து, அவரை டாக்டர் ராமதாஸ் பா.ம.க மாநில துணைத் தலைவராக நியமனம் செய்தார். எடப்படி தலைமையிலான அதிமுகவை பா.ம .க கடுமையாக விமர்சித்து வந்தது.இந்த நிலையில், திடீர் திருப்பமாக பா.ம.க , வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இக்கூட்டணி பா.ம்.க நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பாமக இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அக்கட்சியில் இருந்து விலகினார்.இந்நிலையில், பா.ம.க மாநில துணைத் தலைவர் பதவி வகித்து வந்த நடிகர் ரஞ்சித்தும் இன்று பா.ம.க.வில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார். இது குறித்து நடிகர் ரஞ்சித் கோவையில் செய்தியாளர்களிடம் கூறி யதாவது,”கடந்த வாரம் வரை முதல் அமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.கூட்டணி தொடர்பாக பா.ம.க. தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள். கூட்டணி தொடர்பாக எந்த தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது?4 பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை கூறிவிட்டு எப்படி அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்கலாம்? மதுவுக்கு எதிராக போராடிவிட்டு மதுக்கடைகளை நடத்துவோரிடம் கூட்டணி வைப்பது என்பது ஏற்க கூடியதல்ல. இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பா.ம.க. ஏமாற்றி விட்டது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.