வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வையில், அஜித்துடன் நடித்து வரும் நடிகை வித்யாபாலன், நவி மும்பையில் உள்ள மாதா அமீர்தானந்தமயியின்ஆசிரமத்தில் நடந்த பிரம்மஸ்தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாதா அமிர்தானந்த மயி தத்தெடுத்த 100 கிராமங்களில் பன்வெல் மாவட்டத்தில் உள்ள ரான்சாய் கிராமமும் ஓன்று.அக் கிராமத்தாய் சேர்ந்த பெண்களுக்கு மாதாஅமிர்தானந்தா மயியுடன் இணைந்து புடவைகளை வழங்கினார். தான் அம்மாவின் தீவிர பக்தையானது குறித்து வித்யாபாலன் கூறியதாவது, “நான் குழந்தையாக இருந்தபோதே அம்மாவின் தீவிர பக்தனாக இருந்தேன், அன்பின் மூலம் நிலைமையைக் கையாளுவதற்கு அவர் எப்போதும் என்னை கவர்ந்திருக்கிறாள். அநேக மக்கள் ஏன் அவரை அதிக எண்ணிக்கையில் நாடுகிறார்கள் என அடிக்கடி ஆச்சரியப்படுவேன் , ஆனால் பின்னர் பக்தர்கள் அவர் எளிமையாகவும் அன்பினாலும் பக்தர்களின் பிரச்சனையைதனது சொற்பொழிவின் மூலம் தீர்த்து வைப்பதை உணர்ந்தேன். அம்மாவின் மதம் அன்பின் மதமாகும். இந்த தத்துவத்தைச் சுற்றி நான் என் வாழ்க்கையை நடத்துவதற்கு முயற்சி செய்கிறேன். என்னைப் பொறுத்தவரை, அம்மா லவ் இன்கர்னேட், யுனிவர்சல் தாய், என்கிறார்.