சிவப்பு,மஞ்சள்,பச்சை சித்தார்த்தின் புதிய கட்சிக் கொடியா?

அரசியலில் அவ்வப்போது கண்டனக்கணைகளை ஏவுகிறவர்களில் சித்தார்த்தும் ஒருவர்.
அதிலும் பிஜேபியின் மதம் சார்ந்த அரசியலை சாடுவது என்றால் ஜல்லிக்கட்டுக்காளை மாதிரி பாய்ச்சல்.!
‘சிவப்பு,மஞ்சள்,பச்சை’ என்பது இவரும் ஜி.வி.பிரகாஷும் இணைந்து நடிக்கப்போகிற படம்.
ஜி.வி.பிரகாஷுக்கு சமூக அக்கறை அதிகம்.அவ்வப்போது இவரும் சீறுவார்.
புதிய படத்தில் பிரகாஷுக்கு அக்காவாக லிஜோ மோல் என்கிற மலையாள நடிகை நடிக்கிறார்.தமிழுக்கு இன்னொரு கேரளா வரவு. இவரது கணவராக சித்தார்த். அக்கா-தம்பி இருவர்க்கிடையில் நடக்கிற உணர்வுப் பூர்வமான திரில்லர் என்கிறார்கள்.