வெற்றிகரமான இரண்டாம் ஆண்டு தொடக்கம்.!

நல்லாதரவு தந்து கொண்டிருக்கிற நல் இதயங்களுக்கு ,
நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சினிமா முரசம் தெரிவித்துக் கொள்கிறது.
நய வஞ்சக நல்லவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த உலகில் நொடித்து விழுந்தபோது கை கொடுத்து தூக்கி விட்டவர் சகோதரர் கலைப்புலி தாணு அவர்கள்தான்!
எனக்காக அவர் ஒரு வார இதழைத் தொடங்கச் சொன்னார். ஆனால் நான் தேர்வு செய்தது இந்த இணைய தளத்தை.!
அவரது ராசியான பொற்கரங்களால் தொடங்கப்பட்ட ‘சினிமா முரசம்’ நன்றாகவே வளர்ந்து கொண்டு வருகிறது. இன்னும் சில மாற்றங்கள் எதிர்வரும் காலத்தில் நிகழும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றும் இன்றும் எனக்கு துணையாக இருந்துவருகிற மக்கள் தொடர்பாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருமைச்சகோதரர் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமாரின் அற்புதமான ஆலோசனைகளும் ,வழி காட்டுதலும் உதவியாக இருக்கிறது.
இந்த இணைய தளம் இணக்கமான தளம். ஆனால் துரோகங்களுக்குத் துணை போகாது.
உங்களின் தொடர்ந்த நல்லாதரவு நாடுகிறது சினிமா முரசம்.
அன்புடன்,
தேவிமணி