ஒரே படம் நடிகர் அல்லது நடிகையை உயரம் கொண்டு சென்று விடும்.
அது சிறந்த நடிப்பினாலா,அல்லது திறந்த உடம்பினாலா?
இரண்டுமே இன்று சாத்தியம்தான் என்கிறது கலையுலகம்.
திரை உலகின் அடுத்த பிளாட்பாரமாக இருக்கிறது வெப் சீரியல்கள்.
தணிக்கை என்கிற தடைகள் இல்லை என்பதால் படைப்பாளிகளின் கற்பனைகள் பட்டமாக பறக்கின்றன.
கணவன் மனைவி நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை ஆடைகள் கலைந்து காட்ட முடிகிறது.
ஜோபிதா என்கிற தெலுங்கு நடிகை.விசாகபட்டணத்து மிஸ் இந்தியா.
மேட் இன் ஹெவன் என்பது வெப் சீரியலின் பெயர். சோயா அக்தர் என்கிற பிரபலமான இயக்குநர் இயக்கியது.
அந்த சீரியலில் கணவன் மனைவி படுக்கை அறை காட்சியில் எங்கெல்லாம் கைகள் ஊர்கின்றன,கசக்குகின்றன என்பதை படமாக்கி இருக்கிறார்.
எக்கசக்கமான வரவேற்பு.
ஹாலிவுட் ரேஞ்சுக்கு நடித்ததால் பாலிவுட்டில் ஐந்து படங்கள் புக் ஆகி இருக்கின்றன.