ரஜினியின் இரண்டாவது மருமகனும் நடிகன் ஆகிறார்?

சவுந்தர்யாவை கல்யாணம் செய்து கொண்ட விசாகன் பெரும்  தொழிலதிபர்.

இருந்தாலும் இவருக்கு சினிமா ஆசை உண்டு. ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். நடித்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலையும் கிடையாது. 

நடிப்பதற்கேற்ற முகவெட்டு உள்ள அழகானவர்தான். உயரமும் உடல் பலமும் ஆக்ஷன் ஹீரோ மாதிரியான தோற்றமும்….

இவரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை  இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்க்கு இருப்பதாக தெரிகிறது.

ஆனால் கேட்பதற்கு தயங்குகிறார் என்கிறார்கள். ரஜினியின் இரண்டு மருமகன்களும் நடிக்கிறார்கள் .மாமன் மருமகன்களின் ஆதிக்கத்துக்கு வழி வகுக்கிறாரோ என்று யாராவது சொல்லி விட்டால்?

ஆனாலும் ஒரே ஒரு படமாவது விசாகனை வைத்து இயக்கிவிட வேண்டும் என்கிற ஆசை இருப்பதாக தெரிகிறது