சூடு பிடிக்கிறது விஜய் பிறந்தநாள் நற்பணிகள்.!

மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் என்றால் முன்னணியில் இருக்கிற நடிகர்கள் தங்களின் ரசிகர் மன்றங்களின் வழியாக நற்பணிகள் செய்வது வழக்கம்தான்.!
ஆனால் அந்த நற்பணிகள் அருகிவருகிற காலத்தில் தளபதி விஜய் ரசிகர்கள் தொடர்ந்து செய்வது வரவேற்புக்குரியதே.!
திருமதி. சங்கீதா, கௌதமி மற்றும் தளபதியின் ரசிகர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .
இந்த நலத்திட்ட விழா கள்ளக்குறிச்சி தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் பிரகாஷால் நடத்தப்பட்டது .தையல் இயந்திரம் 3 பேருக்கு ,ஹெல்மட் 200 பேருக்கு ,அரிசி 5 கிலோ – 700 பேருக்கு ,புடவை 500 பேருக்கு,
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காக்கி துணி -150 பேருக்கு ,தொழிலார்களுக்கு பச்சை நிற துணி 100 பேருக்கு
பூச்சிதெளிப்பான் இயந்திரம் 15 பேருக்கு, சில்வர் குடங்கள் 300 பேருக்கு 1300 பொதுமக்களுக்கு அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் பரணிபாலாஜி கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார் .