சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டுச் சேருவதைப் போல ‘கொலைகாரன் வெற்றிக் கூட்டணி அடுத்த படத்துக்கும் கூட்டு சேர்ந்திருக்கிறது.
தியா மூவீஸ் பிரதீப் குமார்,கமல் பொஹ்ரா,டாக்டர் தனஞ்செயன் ஆகியோர் அடுத்த படத்துக்கான வேலையை தொடங்கி இருக்கிறார்கள்.
படத்தை இயக்குபவர் பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளரான விஜய் மில்டன், படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி, இன்னொரு இளம் நடிகரும் தேர்வு செய்யப் படவிருக்கிறார்.
ஆக்ஷன் திரில்லர், டையு,டாமன் ,கோவா ஆகிய நகரங்களில் படமாக்கப்பட இருக்கிறது.