தமிழகத்தில் தபால் துறை தேர்வு நடந்தது. இதில் மொத்தம் 950 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
ஆங்கிலம் , இந்தி என இரண்டு மொழிகளில் மட்டுமே எழுத முடியும். பிராந்திய மொழிகளில் எழுத முடியாது என தபால் துறை அறிவித்து இருந்த காரணத்தால், ஏராளமானோர் இந்த தேர்வில் பங்கு பெற முடியாமல் போனதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து இன்று காலை சென்னை நடனக் கலைஞர்கள் சங்கத்தில் ஓட்டு போட வந்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘தமிழகத்தில் ஒருபோதும் இந்தி நுழைய முடியாது.
மாணவப் பருவத்தில் இருந்தே இதை நான் மறுத்து கொண்டிருக்கிறேன் .இப்போ து மன மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழகத்திற்கு அந்த மன மாற்றம் ஏற்படவே ஏற்படாது என உறுதியாக உயிர்த்துடிப்புள்ள ஒரு தமிழனாக என்னால் சொல்ல முடியும்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்