பிக்பாஸில் சண்டிராணியாக இருந்த வனிதா ஒரு வழியாக குறைந்த ஓட்டுகள் பெற்று வெளியேறி விட்டார்.
வெள்ளைக்கார வீட்டுப்பிள்ளை மாதிரி எதற்கெடுத்தாலும் இங்கிலிஸ்தான் வாயில் முதலில் வரும். தனக்கு அடங்கியவராக இருக்கவேண்டும் என்கிற ஆதிபத்திய மனப்பான்மை கொண்ட வனிதாவை பார்வையாளர்களே வெளியேற்றியது வரவேற்கத்தகுந்தது.
ஆனால் வனிதாவை குறை சொன்னவர்கள் எல்லாம் கண்ணீர் விட்ட காட்சிகள் உண்மையாகவே உலுக்கிவிட்டன. அதிலும் அந்த கிழவர் மோகன் வைத்யா கண்களை கசக்கினாரே தவிர கண்ணீர் வரலே. அருகில் இருந்தவர் “கண்ணீரையே காணோம் “என கமெண்ட் அடித்தது காதில் கேட்டது.
மோகன் வைத்யாவுக்கு சந்தோஷமோ துக்கமோ ஏதாகிலும் உடனே அருகில் உள்ள பெண்களை கட்டித் தழுவிக் கொள்கிறார். இந்த மனிதரை அடுத்தவாட்டியாவது வெளியே அனுப்பிச்சிடுங்க தலைவரே!
“சரியான பொம்மனாட்டி பைத்தியம்” என்று பக்கத்திலிருந்த மாமி கமெண்ட்.
“இனிமே சண்டை போட ஆள் இல்லையே” என்று கவின் கவலைப்பட பக்கத்திலிருந்த மீரா “அதான் நானிருக்கேனே ..என்கிட்டே யாராவது சண்டைக்கு வந்தா பச்சை பச்சையா பேசுவேன்….அசிங்கம் அசிங்கமா திட்டுவேன் “என்றபடியே எழுந்து சென்றார்.
ஆக வனிதாவுக்கு அக்கா ஒருத்தி அகத்துக்குள் இருக்கா!