தெருவோரக் கடைகளில் சாப்பிடுவதை கேவலமாக நினைப்பவர்களில் சினிமா பிரபலங்களும் உண்டு.சிலர் ஆசைப்பட்டாலும் ரசிகர்களின் தொல்லைகள் அவர்களை சாப்பிட விடுவதில்லை.
இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாத கடைகளாகப் பார்த்து காப்பி.டீ, வடை வகையறாக்களை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
சிலர் காரில் அமர்ந்து கொண்டு உதவியாளர்களை விட்டு வாங்கி வரச்சொல்லுவார்கள்.
இந்த உணவுகளில் புழுவோ,ஈயோ வருவதில்லை.
ஆனால் நட்சத்திர ஹோட்டல்களில்..!
ஹைதராபாத்தில் இருக்கிற ‘டபுள் ட்ரீ’என்கிற ஸ்டார் ஹோட்டலில் பிரியங்கா சோப்ராவின் சகோதரி மீரா சோப்ரா சாப்பிட சென்றிருக்கிறார்.
அவரது தகுதிக்கு ஏற்ப ஸ்வீட் வகையறாக்களை ஆர்டர் செய்திருக்கிறார்.
வந்தது.
சாப்பிட ஸ்பூனால் குத்தினால் வெள்ளை நிறப் புழுக்கள் பீங்கான் தட்டில் வலம் வந்தன.
நொந்து போய் விட்டார் மீரா சோப்ரா.அதை அப்படியே படம் எடுத்து டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
“பணம் போனாலும் பரவாயில்லைன்னு அதிக காசு கொடுத்து சாப்பிட போறோம்.ஆனால் இவர்கள் புழுக்களை சாப்பிடக் கொடுக்கிறார்கள்.
உணவுப் பாதுகாப்பு கழகத்தின் சர்டிபிகேட் இந்த ஹோட்டலுக்கு ! சீ!“என எழுதியிருக்கிறார்.