ஓட்டுக் கேட்பதற்காக தொண்டர்களை கெஞ்சி கூத்தாடிய தலைவர்கள் தேர்தல் முடிந்ததும் கழற்றி விட்டு விடுவார்கள்.
பாஜக மட்டும் விதி விலக்கா?
ஹரியானா முதன் மந்திரி மனோகர்லால் கட்டார். இவர் சட்டமன்றத் தேர்தலை எதிர்பார்த்து ‘ஜன ஆசிர்வாத் யாத்ரா’வை தொகுதியில் தொடங்கி இருக்கிறார்.
வேனில் நின்றபடி சென்ற அவருக்கு ஒரு தொண்டர் கோடாலியை பரிசாக கொடுத்தார்.
இன்னொருவர் ஜரிகை தலைப்பாகை வைப்பதற்கு முயன்றார். அவர் வைத்ததும் முதன்மந்திரி “உன் தொண்டையை கட் பண்ணிடுவேன்”என்று கோபமாக சொன்னது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இது வைரலாகி வருகிறது.
இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி அறிக்கை விட்டிருக்கிறது.
முதன்மந்திரி என்ன சொல்வார் “ஜரிகை தலைப்பாகை வைப்பது எனக்கு அறவே பிடிக்காது. இந்த ஆடம்பரத்தை ஆட்சிக்கு வந்த பிறகு வெறுக்கிறேன் !”என்கிறார்.
பூனைக்கு கருவாடு பிடிக்காது என்று யாராவது சொன்னால் நம்பி விடுங்கள்.!