மகளை விற்ற தந்தை.! காந்தி தேசத்தின் கதறல்.!

குஜராத் மாநிலம் .

பனாஸ்கந்தாவில் ஒரு ஏழைத் தந்தை. வறுமையை மணந்து கொண்டவன்.

அவனது குடும்பத்தின் அன்றாட பசியைத் தீர்ப்பதற்கு அவனுக்கோர் வேலை இல்லை.

காந்தி பிறந்த தேசத்தில் அவரது 150 ஆவது பிறந்த வருடத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

குறையொன்று மில்லை கருணாமூர்த்தி!

ஆனால்அவனது  குடும்ப பசியை தீர்க்க வழி இல்லையே?

கிராமத்து எஜன்ட் ஒருவன் வந்தான். பேரம் பேசினான்.

“கோவிந்த் தாக்கர் என்பது அவரது பெயர். வயது அதிகம் இல்லை.37 தான்! அவருக்கு உனது பத்து வயது மகளை விற்று விடு.! 50ஆயிரம் ரூபாய் வாங்கித் தருகிறேன். உனது குடும்பத்தின் வறுமைப்பசியை போக்கிக்கொள் “என ஆலோசனை சொன்னான். 

விலை பேசியது எதற்கு? அந்த பெண் வீட்டு வேலை செய்வதற்காகவா? இல்லை வீட்டுக்காரியாக படுக்கை அறையை அலங்கரிப்பதற்கு.

அந்த பெண்ணுக்கு நெற்றித் திலகமிட்டு மணமேடையை சுற்றி வந்ததை வீடியோ எடுத்தவன் போலீசில் கொடுக்க இப்போது கேஸ் ஆகியிருக்கிறது. !

இதுவும் ஒரு சாதனைதான்! வறுமையற்ற இந்தியா.!