‘சகாப்தம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி,வால்பாறை,ஆழியார் டேம் போன்ற பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது. அங்கே ஒரு டூயட் பாடல் படமாக்கப்பட்டது இதற்கு மாஸ்டர் ஹபீப் நடனம் அமைக்க நாயகன் சண்முகபாண்டியனும்,நாயகி நேஹா ஹிங்கும் கலந்துகொண்டார்கள்.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் 15 நாட்கள் நடைபெற்றது அப்போது அங்கே நாயகனின் அறிமுகப்பாடலும் எடுக்கப்பட்டது .அதில் சுமார் ஆயிரம் துணை நடிகர்களும்,இருநூறு நடன கலைஞர்களும் பங்கேற்க மிக பிரமாண்ட முறையில் நடனம் அமைத்து கொடுத்துள்ளார் மாஸ்டர் ஷோபி .மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் 20 நாட்கள் நடைபெற்றது.
மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது.
இதில் கதாநாயகன் சண்முகபாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 போட்டுகளில் இருநூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக்கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார். அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. மேலும் பிரமாண்டம் சேர்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டை காட்சியை படமாக்கியுள்ளார்கள்.
இந்த சண்டைக்காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது அந்த சண்டைக் காட்சியை தாய்லாந்தை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா அவர்களால் படமாக்கப்பட்டது.தற்போது ,அனைத்து படப் பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பாக
சிம்பு, ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் ஆகியோர் பாடிய குத்து பாட்டை, மிக விரைவில் ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக அரங்கு அமைத்து படமாக்க திட்டமிட்டு உள்ளனர். இப்பாடலில் கதாநாயகன் சண்முகபண்டியன் மற்றும் இரண்டு கதாநாயகிகள் நேஹா ஹிங் மற்றும் சுப்ரா ஐயப்பா நடனமாட உள்ளனர். இப்பாடலுக்கு மாஸ்டர் ராஜு சுந்தரம் நடனம் அமைக்கவுள்ளார். இப்பாடலை சிம்பு தயாரிப்பாளர் எல்.கே.சுதிஷ் அவர்களின் நட்புக்காக பாடிகொடுத்தாராம். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது என்கிறார் இயக்குனர் சுரேந்திரன்
இதில் நாயகனாக சண்முகபாண்டியனும் நாயகிகளாக நேகா ஹிங் வும், சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன்,பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன்,தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத்,சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய் , ரேகாசுரேஷ்,முத்துகாளை மற்றும் பலர் நடிக்கிறார்கள்.