மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில்,விஜய் சந்தர் இயக்கத்தில் உருவான ’சங்கத்தமிழன்’, சீனுராமசாமி இயக்கத்தில் உருவான மாமனிதன் உட்பட ஒரு சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில்,மணிகண்டனின் ’கடைசி விவசாயி’, எஸ்.பி ஜனநாதனின் லாபம், பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் க/பெ ரண சிங்கம், ’தளபதி 64’ உள்ளிட்ட 8 படங்கள் அவரது கைவசம் உள்ளது.
இந்நிலையில், வெங்கடகிருஷ்ன ரோஹ்நாத் இயக்கத்தில் விஜய்சேதுபதியின் 33 வது படமாக உருவாகும் இப் படத்துக்கு ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது.