எப்போதாவது நம்ம ஆட்கள் வெளிநாட்டு போஸ்டர் படங்களை காப்பி அடிப்பது வழக்கம்.உடனே நம்ம ஆட்கள் இது அந்த படத்தில் இருந்து சுட்டது ,இந்த படத்தில் இருந்து சுட்டது என்று கச்சேரி வைத்து விடுவார்கள்.
கதையையே சுடும்போது போஸ்டரை சுட்டால் தப்பா? புரியல.!முன்னெல்லாம் நாலஞ்சு டிவிடி களை பார்த்து அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம்னு எடுத்து ஒரு கதையா பண்ணி நம்ம கைச்சரக்கையும் சேர்த்து படம் பண்ணிடுவோம். இப்ப அது எதுக்கு வேலையத்த வேலை. கதையையே சுட்டா என்ன ?
20 வருசத்துக்கு முந்திய படங்களின் கதையை சுட்டா யாருக்கு தெரியப் போகுதுன்னு போட்டுத் தள்ளுன்னு கை வரிசையை காட்டிடுறோம் .இத நாம்ப மட்டும் செய்யல.பாலிவுட் அண்ணாத்தேக்களும் செஞ்சிக் கிட்டுதான் இருக்காங்க.
சயீப் அலிகான் நடித்திருக்கும் தன்ஹாஜி என்கிற படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.
அது அப்படியே ஜான்ஸ் ஸ்னோ நடித்திருக்கும் காட் படத்தின் போஸ்டர் காப்பி என்று நெட்டில் கிழிக்கிறார்கள்.