‘தேசத்துரோகி ‘முஷாரப்பை தூக்கில் போட முடியுமா?

பாகிஸ்தான் அதிபராக சில காலம் இருந்தவர் முஷாரப் .சர்வ அதிகாரமும் கையில் இருந்தது. 2007-ல் எமெர்ஜென்சியை கொண்டுவந்தார். கைது படலங்கள் நடந்தேறின. ஏன் என்கிற கேள்வி கேட்கப்படக்கூடாது என்பதற்காகத்தானே எமெர்ஜென்சி.!
அவர் பிறப்பித்த நெருக்கடி நிலை இன்று அவருக்கே எமனாகி நிற்கிறது.
அவருக்குப் பின்னால் பதவிக்கு வந்தவர்கள் அவரை தேசத் துரோகி என சொல்லி வழக்குத் தொடர்ந்தார்கள்.
வழக்கு விசாரணையின் போது அவர் துபாயில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். வயது 76.
தன்னால் பாகிஸ்தான் வரமுடியாது.”வேண்டுமென்றால் பாகிஸ்தான் நீதி விசாரணைக்குழுவினரை துபாய் வரச்சொல்லி எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொள்ளுங்கள் .”என்பதாக அறிவித்து விட்டார்.
ஆனால் பெஷாவர் நீதி மன்றம் “அவரைத் தேசத்துரோகி “என கருதி மரண தண்டனை விதித்திருக்கிறது.
ஆனால் துபாயில் இருக்கிற அவரை அந்த நாட்டு சட்டம் பாகிஸ்தானுக்கு அனுப்ப அனுமதிக்குமா ,அடைக்கலம் அடைந்தவரை ஒப்படைக்குமா?
தெரியவில்லை.!