டைவர்ஸ் என்பது இடி மாதிரிதான்!
அதிலும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள் இரண்டு பிள்ளைகளை பெற்ற பிறகு விலகி விடுவது ,இல்லறம் துறப்பது மரண வலி மாதிரியாகவே இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.
இயக்குநர் பிரியதர்சன்- நடிகை லிஸ்ஸி இருவரும் லவ் பேர்ட்ஸ். காதலை மதித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள். ஆண் ஒன்று பெண் ஒன்று என மகிழ்சசியான குடும்ப வாழ்க்கை. என்னவோ தெரியாது ஏழரை எப்படி புகுந்தது என்பது…
மகள் அம்மாவிடம், மகன் அப்பாவிடம் என டைவர்ஸ் பிரித்து ஒப்படைத்து விட்டது.
கல்யாணி இப்போது நடிகை. சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தின் ஜோடி !
பெற்றோரின் டைவர்ஸ் இவரை எந்த அளவுக்கு பாதித்தது?
ஒரு நாளிதழுக்கு பேட்டி…
“பேரதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் டைவர்ஸ் என்பது யாரையாவது பாதிக்காமல் இருக்காது. எங்கப்பா அம்மா இருவரும் சட்ட ரீதியாக பிரிந்ததை ஒரு மகளால் எப்படி தாங்க முடியும். ஆனால் எங்கள் குடும்பம் தற்போது அமைதியுடன் ஆனந்தமாக இருக்கிறது.எனது பெற்றோருடன் எப்பவும் போல மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.