அஞ்சான், கத்தி , பத்து எண்றதுக்குள்ள படங்களைத் தொடர்ந்து தனுசுடன் தங்க மகன், மற்றும் தெறியில் விஜய்யுடன் அவரது மனைவியாக நடித்து வருகிறார். (இதில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய்-சமந்தாவின் மகளாக நடித்து வருவது குறிப்பிடதக்கது) இதற்கிடையே, அவருக்கு பாகுபலை,ருத்ரமாதேவி போன்ற சரித்திர படங்களில் நடிக்கும் ஆசையும் மேலோங்கியுள்ளது.அதனால், ஆந்திராவிலுள்ள சில அபிமான இயக்குனர்களை சந்தித்து வாய்ப்பு தேடி வரும் சமந்தா, அடுத்தபடியாக சரித்திர கதைகளுக்கு தேவையான பழங்கால சண்டை பயிற்சி மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடவும் திட்டமிட்டிருக்கிறாராம்