அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில வாக்குகள் எண்ணும் பணி வருவாய்க் கோட்டாட்சியர் செல்லப்பா முன்னிலையில் வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இதில் முதலாவதாக தபால் ஒட்டுக்கள் எண்ணும் பணி தொடங்கியது. தபால் ஒட்டுப்பெட்டியை சீல் பிரித்து பூட்டைத் திறக்க முற்பட்ட போது சாவி இல்லாததால் பதற்றம் ஏற்பட்டது. எனவே சுத்தியல் கொண்டு பூட்டு உடைக்கப்பட்டு பின்னர் தபால் ஒட்டுக்களை வெளியில் எடுத்தனர்.
மொத்தம் 303 தபால் ஓட்டுக்களில் மொத்தம் பதிவான ஒட்டுக்கள் 276 ஆகும். பின்னர் அவ்வோட்டுக்களைப் பிரித்து வைக்கும் பணி தொடங்கியது. வாக்குகளை எண்ணும் பணி அடுத்து நடைபெற உள்ளது.